May 9, 2021

ஒரு சுவாரசியமான அனுபவம்

    அது ஒரு பழைய காலத்து ஆட்கள் வசித்து வந்த காலகட்டம். புளியம்பதி. சிறிய சேரி வாழ் மக்கள் பகுதி என்றும் கூட சொல்லலாம்.

    அங்கே ஒரு சகாய மாதா தேவாலயமொன்று உள்ளது. சேரி வாழ் சின்ன சின்ன பசங்களுக்கு படிப்பு சொல்லிதர ஆரம்ப கல்விக்கூடம் ஒன்று உண்டு.

    பொதுவாக சிறுவர்களுக்கு பள்ளிக்கூடமே பிடிக்காதில்லையா! இங்கு கொஞ்சம்,கைப் பந்து, கூடை பந்து, கேரம் போர்டு, டேபிள் டென்னிஸ், பூப்பந்து வித்தியாசமான சூழல் அமைந்துள்ளது. பள்ளி முடிந்ததும் மாணவர்கள் ஆலயத்தினுள்ளே உள்ள பொது அரங்கத்திநினுள்ளே மற்றும் கால் பந்து, போன்ற விளையாட்டு மைதானத்தில் விளையாட தொடங்கி விடுவார்கள்.

    இவ்வாறான பொழுதுகளில் அங்கே பாதிரிகள் அதிகம் உண்டு. பாதிரிகளுக்கு குட்டி பசங்கலென்றால் மிக அலாதி பிரியம் பசங்களும் அவர்கள் பின்னாலேயே ஓடி வருவர்கள்.

    அதிலே ஒரு பாதிரி...பெயர் ஜார்ஜ் ப்ளாத்தோட்டம். (Rev.Fr.George Plathottam) அருமையான மனிதர். என் அப்பா அடிக்கடி அவரை பற்றி கூறுவார். அப்பா சிறுவனாய் இருந்தபோது அவருடன் நெறைய அனுபவங்கள் இருந்ததாக சொல்வார்.

    ஒரு சமயம் இந்த பாதிரியார் பசங்கள் விளையாடும் இடத்திற்குச் சென்று....”டே...பசங்களா...யார் இந்த கேரம் விளையாடி ஜெயிக்கிறோ அவருக்கு வெளிநாட்டு சாக்கிலட் தருவேன்” என்றிருக்கிறார். உடனே எல்லாரும் வேக வேகமாக ஆட தொடங்கினர்.  இறுதியில் ஜெயித்தவருக்கு பாதர் தன் பாக்கெட் உள்ளே கை விட்டு பெரிய துண்டு அச்சு வெல்லம் எடுத்து ஃபாரின் சாக்லேட் என்று கொடுத்தாரம். எல்லா பசங்களும் ஒருவரை ஒருவரை பார்த்து கொண்டனராம். இது போல் பல நிகழ்வுகள் அங்கிருக்கும் பாதிரிகள் செய்து குட்டி பசங்களை வசீகரித்திருகிரார்கள். அதில் ஒருவர் அருட்தந்தை ஜெரார்ட். அவரம் இதுபோல் நெறைய நெறைய செய்திருக்கிறாராம்.




    அதே நேரம்  ஏழை மாணவர்களுக்கு உதவிகள், உணவு, போன்ற உதவிகள் செய்தது மற்றுமில்லாமல் மேலும் பல மனிதர்களை உருவாக்கி உள்ளனர்.

    இத்தனை பெரிய காரியங்களை மட்டுமில்லாமல் இன்னும் பல பெரிய செயல்களை செய்துள்ளனர். நேரம் வரும்போது மற்றவர்கள் பற்றி இங்கே காண்போம்.