Nov 19, 2021
லிவ்-இன் ரிலேஷன்ஷிப் (Live-in Relationship) என்பது திருமணமாகாத இருவர் ஒத்த மனத்துடன் இணைந்து வாழும் முறையாகும். உலகமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் வேகமாக வளர்ந்துவரும் இக்காலகட்டத்தில், இந்த இணைந்து வாழும் வாழ்க்கை முறை மாபெரும் புரட்சியினை உருவாக்கி வருகிறது என்பதே நிதர்சனம். எவ்வாறு திருமணம் என்பது சட்டப் பூர்வமான ஒரு அங்கீகாரத்தை இரு தனிப்பட்ட மனிதர்களுக்கு அளிக்கிறதோ அதே போன்று இந்த இணைந்து வாழும் முறையும் சமீப காலங்களில் சட்ட ரீதியான பாதுகாப்பினை வழங்கி வருகிறது.
இந்தியா போன்ற மதம் சார்ந்த
நம்பிக்கைகள் அதிகம் கொண்ட வளர்ந்து வரும் நாடுகளிலும் இம்முறை பெரும் சர்ச்சைகளை
உண்டாக்கி வருகின்றன. திருமனத்திற்கென்று பல்வேறு சட்டங்கள் கடுமையான முறையில்
கையாளப்பட்டு வரும் இன்றைய சமூகத்தில் live-in வாழ்க்கை முறைக்கு அத்துனைப்
பாதுகாப்பான மற்றும் தெளிவான சட்டங்கள் இல்லை என்பதே இவ்வாழ்க்கை முறையினை
அச்சுறுத்தும் உண்மை.
திருமணத்திற்குப் பின், ஒருவரோடொருவர்
இணைந்து தம் வாழ்க்கையைத் தொடர இயலாமல் போகும் நிலையைத் தவிக்கவே இன்றைய இளம்
தலைமுறையினர் live-in வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கின்றனர். இது, தோல்வியில்
முடியும் திருமணங்களை தவிர்க்க பெரிதும் உதவுவதாக அவர்கள் வாதாடுகின்றனர்.
சரி, live-in வாழ்க்கை முறையில்
வாழும் இணையர்க்கு தெளிவான சட்டத் திட்டங்கள் உள்ளனவா எனில், இல்லை என்றே
சொல்லலாம். ஆயினும், சில பல நாடுகளிலும், ஏன், இந்தியாவிலுமே கூட இம்முறைக்கு
எதிரான மற்றும் பாதுகாப்பளிக்கும் இரண்டு முகம் கொண்ட சட்டங்கள் சில நீதி
மன்றங்களில் பதிவாகியுள்ளன.
மேலோட்டமாக பார்த்தால், எந்த வித சமூக
அங்கீகாரங்களோ, சமூகக் கோட்பாடுகளோ, அல்லது வேறு எந்த திட்டங்களோ இந்த live-in
வாழ்க்கை முறைக்கு வழங்கப்படுவதில்லை. இருப்பினும், சில நாடுகளிலும், இந்திய
மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்களில், இதன் தொடர்பான வழக்குகளும், தீர்ப்புகளும்
பதிவாகிக் கொண்டுதானிருக்கின்றன.
மேற்கிந்திய நாடுகளில் இந்த live-in
வாழ்க்கை முறை பல ஆண்டு காலமாக செயல்முறைப் படுததப்பட்டு வருகிறது. அங்கு வாழும்
மக்கள் சாதாரணமாக live-in வாழ்க்கை முறைக்கு பழக்கப் பட்டவர்களாகிவிட்டனர். இதற்கு
சில சட்டங்களும் அங்கு ஏற்படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவிலும் அவ்வப்போது live-in
வாழ்க்கை முறை சார்ந்த சட்ட சிக்கல்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,
live-in வாழ்க்கை முறை என்பது திருமணமாகாத ஒரு ஆணும், பெண்ணும் திருமணச்
சட்டத்தின் படி அல்லாது, இணைந்து வாழ்வதாகும். இம்முறை சார்ந்த வாழ்க்கையில்
ஈடுபடுவது என்பது இந்தியாவில் ஏற்றுக்கொள்ள முடியாததாகி பெரும் சர்ச்சை எழுந்தது.
ஆயினும், வேகமாக மாறி வரும் உலக சூழலுக்கு ஏற்ப இந்திய மக்களும் இந்த வாழ்க்கை
முறை தொடர்பான தெளிவுக்கு வந்துவிட்டனர்.
இப்பொழுது நமக்கு ஒரு சந்தேகம்
ஏற்படலாம். இந்த திருமணம் அல்லாத வாழ்க்கை முறையில் வாழும் இணையருக்கு பிறக்கும்
குழந்தைகள் சமூக அங்கீகாரம் பெற்றவர்களா இல்லையா என்பதே அது! ஆம்! ஜனவரி 2008, நீதியரசர் அர்ஜித் பன்சால்
அவர்களின் தலைமையின் கீழ் அமைந்த உச்சநீதிமன்ற அமர்வின்படி, live-in வாழ்க்கை முறையின்
கீழ் வாழும் இணையர்க்கு பிறக்கும் குழந்தையானது முறைகேடானது அல்ல எனவும்,
அக்குழந்தைக்கு தன் பெற்றோரின் பேரில் எல்லா உரிமைகளும் உண்டு எனவும் உறுதிபடுத்தப்பட்டது.
இதுபோன்று, வெவ்வேறு தீர்ப்புகள்
வெளியாகி live-in வாழ்க்கை முறையினை ஆதரித்துள்ளது. அதன் காரணமாக, live-in
வாழ்க்கை முறையானது புதிய இந்திய சட்டத்தின் படி, திருமணமாக கருதப்படுகிறது.
இந்திய உள்நாட்டுச் சட்டம் 2005 –இன் கீழ் live-in வாழ்க்கை முறையாளர்களும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, live-in வாழ்க்கை முறையில் இருக்கும் ஒரு பெண் மீது வன்முறைச் செயல்
நிகழ்த்தப்படுமெனில், அதுவும் IPC பிரிவு 498 A –இன் கீழ் சட்டமுறைப் படுத்தப்படும்.
இதுபோன்று சட்டரீதியான நடைமுறைகள்
வந்த பிறகும் நாம் இன்னன்மும் live-in வாழ்க்கை முறைக்கு எதிரான கருத்துகளைப்
பரப்பியும், அதனை சமூக சீர்கேடாக கருதியும் வருகிறோம். காலங்கள் மாற மாற அதற்கேற்ப
வாழ்வியல் சட்டங்களும் மாறி வருகின்றன. நாமும் அவற்றிற்கேற்ப மாற வேண்டும்.