Apr 24, 2015
படங்கள்: ஆயிஷா மைந்தன் (அப்துல் காதர்)
பாடல்: 'மாக்கவிஞன் பாரதி' (பகைவனுக்கு அருள்வாய்)
புகை
நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே!
பகை
நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்!
சிப்பியிலே நல்ல முத்து
விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ? – நன்னெஞ்சே!
குப்பையிலே மலர்
கொஞ்சங் குருக்கத்திக்
கொடி வளராதோ? - நன்னெஞ்சே!
உள்ள நிறைவிலோர் கள்ளம்
புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலோர்
சிறிது நஞ்சையும்
சேர்த்தபின்
தேனாமோ? - நன்னெஞ்சே!
Subscribe to:
Posts (Atom)