Nov 10, 2023

Record Dance!

 

வணக்கம் நண்பர்களே!... இத்தனை நாள் வரை சாப்பாடு மற்றும் வாழ்விடங்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த நாம் இப்போது கொஞ்சம் கலைப் பண்பாடு பற்றியும் கதைப்போம். ஆம்...இன்று நாம் இந்தியாவின் மிக மிகப் புகழ்ப்பெற்ற கலை வடிவமான “Record Dance” மற்றும் “தேவதாசி நடனம்” பற்றிப் பார்ப்போம்.


இந்திய நடன வடிவங்கள் பல்வேறு ஆண்டுகளில் பல்வேறு வடிவங்களை கொண்டுள்ளது. இது பண்டைய காலத்திலிருந்து நவீன காலம் வரை ஒரு பெரிய பரிணாமத்தை கொண்டுள்ளது. மொழி உருவாவதற்கு முன்பே நடனக்கலை உருவாகி, பரிணாம வளர்ச்சியில் பெரும்பங்கு வகுத்துள்ளது. 


பொதுவாக பல கலை நிகழ்ச்சிகளில் பரதம், குச்சிப்புடி போன்ற நடன நிகழ்வுகளே நிகழ்த்தப் படுகின்றன. ஆனால், எண்ணிப் பார்த்தால் இது என்ன புது வகை ரெகார்ட் டான்ஸ் என்று நமக்குத் தோணலாம். அந்த அளவுக்குப் பின்தங்கிய இடத்தில் இருக்கிறது இந்த கலை வடிவம்.


அது என்ன ரெகார்ட் டான்ஸ்? இது எங்கிருந்து வந்தது? இதன் பின்னணி என்ன? வாங்க பார்க்கலாம்!



ரெகார்ட் டான்ஸ்... இது பொதுவாக இந்தியாவின் தென் பகுதிகள்-ல பெரும்பாலும் காணப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற பகுதிகளில் திருவிழாக்களின் போது நடத்தப் படுகிறது. பொதுவாக பாமர மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் கிராமங்களிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கலைஞர்கள் நாடகம் மற்றும் திரைப்படங்களில் வரும் நடிகர்களைப் போல் வேடமிட்டு அவர்களைப் போலவே ஆட்டம் ஆடிக் காண்பிப்பார்கள். பண்டைய காலங்களில் மாட்டு வண்டிகளில் கூட்டம் சேரும் இடங்களுக்கும், கோயில் திருவிழாக்களுக்கும் சென்று ரெகார்ட் நடனம் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் சுற்றி நின்று ரசித்து தங்களால் இயன்ற அளவு சன்மானம் வழங்கிச் செல்வர். இந்த நடனம் இன்றும் வாடா மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளது. தெற்கே இது காலப் போக்கில் நெளிந்தும் அழிந்தும் போயிவிட்டது.


அடுத்து,...தேவதாசி முறை நடனம்!... யார் இந்த தேவதாசிகள்!?...


பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் பெண்கள் தங்கள் குடும்பங்களின் வறுமை தாங்காமல் கோயில்களுக்கு கொடையாகக் கொடுக்கப்பட்டனர். அவர்களை ‘தேவதாசிகள்’ என்று அழைத்தனர். இவர்கள் கோவில்களில் இறைவனுக்காக நடனமாடி பாடினர். இவர்கள் தங்கள் வாழ்நாளை இறைப் பணிக்காக அர்பணித்து பெரிய தனக்காரர்களுக்கு தாசியாக வேலைப் பார்ப்பார்கள்.


இந்த தேவதாசிகள் தான் தென்னிந்தியாவில் ‘பரதம்’ என்ற நடனக் கலையை தோற்றுவித்தார்கள். கோயில்களில் அவர்கள் ஆடும் ஆட்டத்தை “சதிர் ஆட்டம்” என்று விளித்துத் தங்கள் வாழ்நாளை அற்பனித்தாலும் அவர்களை தாசிகள் என்றே இந்தச் சமூகம் இழிச்சொல்லால் குறிக்கப்பட்டனர்.



    

பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தில் தேவதாசிகளின் நடன வடிவத்தைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. இவை தவிர பண்டைய நூல்களிலும், சிற்பங்களிலும் தேவதாசிகளின் நடன வடிவங்கள் காணப்படுகின்றன.


தேவதாசி முறை மற்றும் அதன் சதிர் நடன வடிவும் அழிந்து போனதற்கு வரலாறு இரண்டு காரணங்களை சொல்கிறது. முதலாவதாக, பெர்சியா மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் வந்தபோது; இரண்டாவதாக, காலனித்துவத்தின் வருகையால். பிற்காலத்தில் இந்த சதிர் நடனம் பரதக்கலையாக மற்றம் பெற்று இன்று பிரபலமடைந்திருக்கிறது.


மற்றவை... அடுத்தப் பதிவில்!...

 

0 comments: