Aug 10, 2020
ஆஞ்சநேயர் கோயில்-ல இருந்து அம்மன் கோயில் வரைக்கும் தமிழ்நாட்டுல இருக்க மொத்த கோயில்கள்-ளையும் பாரபட்சமே இல்லாம வழங்கப்படும் ஒரு பிரசாதம் ‘சர்க்கரைப் பொங்கல்’-னு சொல்லலாம் மக்களே! ஆம்! சிறியதாக ஒரு கையடக்க தொன்னையில் சுடச்சுட நெய்யும் முந்திரியும் மிதக்க கொஞ்சமாக சர்க்கரைப் பொங்கலை வாங்க அவரவர் போட்டி போடுவது நாம் அனேகமாக எல்லா கோயில்கள்-லயும் பார்க்கலாம். அத்தனை ருசியான பதார்த்தத்தைப் பற்றி நம் ‘உப்பு, புளி, மிளகாய்’-யில் பேசாமல் போவது தெய்வ குற்றமாகுமே!
பொதுவா நம்ம வீட்டிலேயே எதாவது சின்ன விசேஷம்னா கூட உடனே செய்யும் பட்சணம் இந்த சர்க்கரைப் பொங்கல் தாங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைப்பதும் இந்த பொங்கல் தான்.
அரிசியையும் பாசிப்பருப்பையும் வறுத்தெடுத்து தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அதனை வேக வைகவேனுடும். அதே சமயத்தில் வெல்லப் பாகைத் தனியாக எடுத்து வைத்து....வேக வைத்த அரிசி பருப்பு பொங்கி வரும்போது அதில் வெல்லப் பாகை கலந்து விட வேண்டும். மேலே நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை ஆகியவற்றைக் கலந்து விட்டால்....அவ்வளவு தாங்க! நெய்யில் செய்த சர்க்கரைப் பொங்கல் தயார்....நெய்யின் வாசனையும் சுவையும் தூக்கும்..
அவசியம் செய்து பார்த்து சுவைத்து மகிழலாம் வாங்க.... இனிமேல் எந்த
கோயிலுக்கு சென்றாலும் நம் கண்கள் சர்க்கரைப் பொங்கலையே தேடும் என்பதில் ஐயமில்லை!
2 comments:
அருமை
அருமை
Post a Comment