Oct 15, 2022

உப்பு, புளி, மிளகாய் – ‘பிரட்'

மனிதன் அன்றாட வாழ்கைக்கு ஓடி கொண்டிருப்பதே உணவுக்காக தான். உணவில்லையேல் மனிதன் இல்லை. அம்பானி, அதானி போன்றோரும் சாதாரண மனிதனும் ஓடி கொண்டிருப்பது உணவுக்காகவே. அவ்வாறு எல்லா தரப்பினரும் உண்ண உகந்தது பிரட் என்னும் ரொட்டி தான். பிரட் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது ரொட்டி என்னும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுதான்.ஏழைகளோ, செல்வந்தர்களோ யாராகிலும் பிரட் உண்ணாமல் இருந்திருக்க முடியாது.
வரலாற்றுப்படி பிரட் என்னும் ரொட்டி வகை கி.பி.8000 ஆண்டில் மத்திய கிழக்குப் பகுதியான எகிப்தில் தயாரானது என சொல்லப்படுகிறது. முதன் முதலில் எகிப்தியர்கள் ஒயின்-ஐ மாவுடன் கலந்து ஒரு புது வகையான உணவு தயாரித்தனர். அது மக்களுக்கு மிகவும் பிடித்து போகவே அதன் அடுத்த முயற்சிக்கு முன்னேறினர். பின்னாட்களில் உலகின் பல நாடுகளிலும் பல வகையான பிரட் வகைகள் தயாரிக்கப்பட்டன. அதில் ரோமர்கள் கி.பி.450 -களில் மாவில் தண்ணீரைக் கலந்து அதனுடன் பதப்படுத்த பட்ட ஈஸ்ட் கலந்து புது வகையான ரொட்டி சமைத்தனர். இது வெள்ளை ரொட்டி ஆகும். பெரும்பான்மையான மேல் வர்க்க ரோமர்கள் மட்டுமே இதனை உண்ணலாம் என ஒரு கூற்றிருந்தது. இதே போல் மத்திய பிரிட்டிஷ் காலத்தில் ரோம் நாட்டில் இருந்தது போலவே ஒரு சட்டம் இருந்தது. அதாவது மேல் வர்க்க மக்கள் மட்டுமே இந்த வகை ரொட்டியை உண்ணலாம் என்னும் வழக்கம் இருந்தது. பின்னர் கி.பி.600-களில் பெர்சியர்கள் காற்றலை போல வேலை செய்யும் ஒரு இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்தனர். இதன் மூலம் ரொட்டிக்கு தேவையான மாவையும், தானியங்களையும் சுலபமாக அரைக்க முடிந்தது.
1834-களில் சுவிட்சர்லாந்தில் ரோல்லர் மில் கண்டுபிடிக்கப் பட்டது. இது உலகில் ரொட்டி தயாரிக்கும் முறைக்கு பெரும் புரட்சியாக அமைந்தது. மேலும் 20-ஆம் நூற்றாண்டுகளில் ரொட்டி உணவு மிருதுவாகவும், வெள்ளை நிறத்திலும், மேலும் அதிக சுவையுடனும் தயாரிக்கப்பட்டது. இப்போதெல்லாம் ரொட்டி தயாரிப்பு என்றாலே கோதுமை மாவு என்று சொல்லப்படுகிறது. அனால் இப்போதோ இந்த மாவிலும் எந்த வகை தானியத்திலும் ரொட்டி சமைக்கலாம் என்றாகிவிட்டது. யுத்தக்களம் போல் உலகில் ஓடிக் கொண்டிருக்கும் நாம் இதோ இப்போது பேசப்படும் ரோட்டிக்காகதான். ரொட்டி இன்றி இன்றைய உலகம் உருவாகி இருக்காது. ஆதி முதல் அந்தம் வரை நம்முடனே பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ரொட்டியை இன்னமும் சீராக்கி புசிப்போம்.

0 comments: