Apr 9, 2014
சர்வதேச சிறப்பு நூலகர்கள் தினம்! [ஏப்ரல் 13]
‘சர்வதேச
சிறப்பு நூலகர்கள் தினம்’, [International
Special Librarian’s Day] சிறப்பு
நூலகர்களையும், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறைக்கு அவர்களின் தனிப்பட்ட
பங்களிப்புகளையும் சிறப்பிக்கும் விதமாக செயற்படுத்தப்படுகிறது. இத்தினம் சிறப்பு
நூலகங்கள் இயக்கம் [Special
Libraries Association (SLA)] என்னும்
இயக்கத்தினால் 1991-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
சர்வதேச
சிறப்பு நூலகர்கள் தினத்தன்று உலக அளவில் பல்வேறு சிறப்பு நூலகங்கள், மற்றும் தகவல்
அறிவியல் துறையில் மாறிவரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான மாநாடுகளும், கூட்டங்களும்
நடைபெறுகின்றன.
சிறப்பு நூலகர்கள்!
‘சிறப்பு
நூலகர்கள்’ என்னும் கூறு, பல்வேறு பெருநிறுவன நூலகங்கள், அரசாங்க நூலகங்கள்,
அறிவியல் நூலகங்கள், சட்ட நூலகங்கள், மருத்துவ நூலகங்கள் மற்றும் அருங்காட்சியக
நூலகங்கள் போன்ற ஏதேனும் ஒரு துறை சார்ந்த நூலகங்களில் சேவையாற்றும் நூலகர்களைக்
குறிக்கிறது. இவ்வகை நூலகங்கள் ‘தகவல் வள மையங்கள்’ (Information Resource Centres) எனவும் குறிக்கப் படுகின்றன.
1909-இல் நடந்த ‘வெர்டானா மாநாட்டில்’ ஜான்
காட்டன் டானா (John Cotton Dana) என்னும் அமெரிக்க நூலகரும், இன்னும் 26 நூலகர்களும்
ஒன்றிணைந்து, சில சிறப்புத் துறைகளில் தனி கவனம் செலுத்தும் வகையில், அவைப் பற்றிய
தகவல்கள் அறிந்த நூலகர்கள் அவசியம் வேண்டும் என முடிவு செய்தனர். இந்த மாநாட்டின் அறிக்கையை
அடிப்படையாகக் கொண்டே ‘சிறப்பு நூலகர்கள் இயக்கம்’ (Special Libraries Association) ‘சிறப்பு நூலகர்கள்’ (special librarians) மற்றும் ‘சிறப்பு
நூலகங்கள்’ (special libraries) என்னும் சொற்பதங்கள் நடைமுறைக்கு வந்தன.
இந்தச் சிறப்பு
நூலகர்கள், ஒரு துறை சார்ந்த பொதுவான செய்திகள் மற்றும் நூல்களைத் தவிர்த்து, அத்துறை
பற்றிய பரவலான, அதிமுக்கியமான, எளிதில் கிடைக்கமாட்டாத மற்றும் நம்பத்தகுந்த
செய்திகள் மற்றும் நூல்களில் கவனம் செலுத்துவர். அல்லது அவர்கள் பணி செய்யும்
அமைப்பிற்குத் தொடர்பான செய்திகள் மற்றும் நூல்களில் வித்தகர்களாக இருப்பர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment