Apr 25, 2014

பிரபஞ்சன்!

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் ஏப்ரல் 27, 1945-ல் புதுச்சேரியில் பிறந்தார். தமிழ் வித்வான் பட்டம் பெற்ற இவர், தமிழ் ஆசிரியராய்ப் பணியாற்றி, பின் குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய இதழ்களிலும் பணியாற்றினார். 1961-ல் பிரபஞ்சன்-இன் முதல் சிறுகதையான ‘என்ன உலகமடா’ பரணி இதழில் வெளியானது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கதைகளும், கட்டுரைகளும் தாமரை, தீபம், கண்ணதாசன், கணையாழி போன்ற பல இதழ்களில் வெளிவந்தன. 1982-ல் வெளியிடப்பட்ட இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ தமிழக அரசின் பரிசைப் பெற்றது. 

1995-ல் ‘வானம் வசப்படும்’ நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார். மேலும், புதுச்சேரி அரசு விருது, பாரதீய பாஷா பரிஷத் விருது, கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது (மகாநதி), இலக்கியச் சிந்தனை விருது (மானுடம் வெல்லும்), ஆதித்தனார் விருது (சந்தியா)  போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பிரபஞ்சன் அவர்களின் படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடா, ஆங்கிலம், ஜெர்மனி, பிரெஞ்சு மற்றும் சுவீடிஷ் மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சில சிறுகதைகளும், நாடகங்களும் பல்வேறு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் வைக்கப்பட்டுள்ளன. 

0 comments: